லக்னோ: உத்தரப் பிரதேச அரசாங்கம், அரசாங்கச் சேவையின்போது உயிர்நீத்தோரின் திருமணமான மகள்களுக்குக் கருணை அடிப்படையில் வேலை பெற வகைசெய்யும் ஒரு முடிவை எடுத்துள்ளது.
அதற்கு அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மாதர்களுக்கு ஆதரவான இத்தகைய ஒரு முடிவை அரசாங்கம் எடுத்து உள்ளது.
அரசாங்கச் சேவையின்போது ஊழியர் மாண்டுவிட்டால் மாண்டவரின் மனைவி, திருமணமான/திருமணமாகாத மகன் மற்றும் திருமணமாகாத மகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை இருந்தது. இப்போது திருமணமான மகளுக்கும் இந்தச் சலுகை நீட்டிக்கப்படுகிறது.
அரசு சேவையில் மாண்டவரின் தகுதி உள்ள குடும்ப உறுப்பினர்கள் அரசு வேலையை மறுத்தால் மட்டுமே அந்த வேலை திருமணமான மகளுக்குக் கிடைக்கும்.