திருப்பதி: ஆந்திர மாநில காடுகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. போலிசார் தேடுதல் வேட்டை யைத் தொடங்கி இருக்கிறார்கள்.
அதில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன.
போலிசாரை கொல்வதற்காக மாவோயிஸ்டுகள் நிலத்தில் பள்ளம் தோண்டி கூரிய மூங்கில் குச்சிகளை நட்டு வைத்து இருக்கிறார்கள்.
அந்த மூங்கில் குச்சிகள் வெளியே தெரியாதபடி கோணிப்பைகளால் மூடப்பட்டு இருக்கின்றன. போலிசார் அவற்றை மிதித்துவிட்டால் குழியில் விழுந்து உயிரிழக்க நேரிடும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.