இந்தியா-இலங்கை தோழமை சங்கத்திற்குப் புத்துயிர்

இந்தியா-இலங்கை தோழமை சங்கத்திற்குப் புத்துயிர்

1 mins read
7f3c35c3-6ede-4588-ad1e-2b916bac83ad
-

கொழும்பு: இந்­தியா-இலங்கை நாடா­ளு­மன்­றத் தோழ­மைச் சங்­கத்­திற்­குப் புத்­து­யிர் அளிக்­கப்­பட்டு உள்­ள­தாக கொழும்­பில் இருக்­கும் இந்­தி­யத் தூதர் கோபால் பாக்லே தெரி­வித்தார்.

இந்த முடிவை அடுத்து இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் பல துறை­களில் இரு தரப்பு நல்­லு­றவு வலுவடைய புதிய ஊக்­கம் கிடைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இலங்கை நாடா­ளு­மன்­றத்­தில் இடம்­பெற்ற தோழ­மைச் சங்­கப் புத்­து­யிர் கூட்­டத்­தில் கோபால் பாக்­லே­வும் கலந்­து­கொண்­டார்.

அந்­தச் சங்­கத்­திற்கு அமைச்­சர் சாமல் ராஜ­பக்சே தலை­வர். சங்­கம் முன்பு செயல்­பட்­டது. ஆனால் 2020 ஆகஸ்ட்­டில் நடந்த தேர்­த­லுக்­குப் பிறகு அமைந்த இப்­போ­தைய நாடாளு­மன்­ற­த்தில் அது முதன்­மு­த­லாக புத்­து­யிர் பெற்­றுள்­ளது.

நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் நடந்த நிகழ்ச்­சி­யில் அமைச்­சர் கள், துணை அமைச்­சர்­கள் உறுப்­பி­னர்­கள் உள்­ளிட்ட 100 பேருக்­கும் மேற்­பட்ட நாடாளு மன்ற உறுப்­பி­னர்­கள் கலந்து கொண்­ட­தா­கத் தெரி­விக்­கப் பட்­டது.

தோழ­மைச் சங்­கத்­தில் இலங்கை சிறு­பான்மை தரப்­பு­களின் தலை­வர்­களும் இடம்­பெற்று இருப்­ப­தாக கொழும்­பில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கம் தெரி­வித்­தது.