தலிபான்: இந்திய அரசுடன் நல்லுறவே நாட்டம்

தலிபான்: இந்திய அரசுடன் நல்லுறவே நாட்டம்

1 mins read
e6d5b5aa-8d13-4bd3-a4d1-be555c798570
-

புது­டெல்லி: தெற்­கா­சிய வட்டாரத்தில் இந்­தியா மிக முக்கிய நாடு என்று வர்­ணித்த தலி­பான், இந்திய அர­சு­டன் நல்ல அர­ச­ தந்­திர உறவை விரும்­பு­வ­தா­கக் கூறியது.

அதே­வே­ளை­யில், எந்­த­வொரு நாட்­டை­யும் தாக்­கு­வ­தற்­கான பூமி­யாக ஆப்­கா­னிஸ்­தானைப் பயன்படுத்த யாருக்­கும் அனு­மதி கிடைக்­காது என்றும் தலி­பான் தரப்பு தெரிவித்தது.

ஆப்­கா­னிஸ்­தான் விவ­கா­ரம் குறித்து எட்டு நாடு­கள் கலந்து கொண்ட பாது­காப்புப் பேச்­சு­வார்த்தையை இந்தியா டெல்­லி­யில் வியாழக்­கி­ழமை நடத்தியது. அதையடுத்து தலிபான் இவ்வாறு தெரிவித்தது.