திருப்பதி: வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் திருப்பதியிலும் நெல்லூரிலும் பல சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துவிட்டது.
ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துவிட்டன. பல இடங்களில் வீடுகளில் நீர் புகுந்துவிட்டதாகத் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரியளவில் மீட்புப் பணிகள் தொடங்கி இருக்கின்றன.
இந்நிலையில், கேரளாவில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தது. அடுத்த நான்கு நாட்களுக்குப் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அருகே உள்ள எரிமேலி, கீரித்தோடு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு வீடுகள் சேதமடைந்தன. இரண்டு ஆட்டோக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
அதேபோல் கர்நாடக மாநிலத்துக்கும் மழை எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தொடர்மழை பெய்யும் என்பதால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது.