புதுடெல்லி: பத்மஸ்ரீ விருது பெற்றவரும் புகழ்பெற்ற வங்காள நெசவாளருமான பிரேன் குமார் பசக், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிறப்புப் பரிசாக ‘சேலை’ ஒன்றை அளித்துள்ளார்.
பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் உரையாற்றுவது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதுதான் அச்சேலையின் சிறப்பம்சம்.
அந்த அன்புப் பரிசால் மனம் நெகிழ்ந்துபோன திரு மோடி, டுவிட்டர் வாயிலாக திரு பசக்கிற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
“திரு பிரேன் குமார் பசக், மேற்கு வங்க மாநிலம், நடியா மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நெசவாளர். இந்திய வரலாற்றின், கலாசாரத்தின் வெவ்வேறு அம்சங்களைச் சேலைகளில் சித்திரிப்பவர். பத்ம விருது பெற்றவர்களுடன் உரையாடியபோது, அவர் அளித்த இந்தச் சிறப்புப் பரிசு எனக்கு மிகவும் பிடித்துப்போனது,” என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் திரு மோடி.