புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு மோசம் அடைந்துள்ளதால் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இணையம் வழியாக வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும் அண்டை மாநிலங்களிலும் பயிா்க்கழிவுகள் எரிப்பு காரணமாக காற்றின் தரக் குறியீடு 471 புள்ளிகளாக பதிவாகியது. இந்நிலையில் நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு பள்ளிகள்
மூடப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்தது. தனியார் அலுவலங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே காற்று மாசு வழக்கு ஒன்றில் வீட்டுக்கு உள்ளேயும் முகக் கவசம் அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் காற்று மாசை எப்படி குறைக்கப் போகிறீர்கள் என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

