செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
bc62e549-d279-4a39-b12d-1e4f5ff5624b
-

புதிதாக 11,850 பேருக்குத் தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,850 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தெரிவித்தது. அதிகபட்சமாக கேரளாவில்

6,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 44 லட்சத்து 26,036ஆக அதிகரித்துள்ளது.

கணிப்பு: உபியில் மீண்டும் பாஜக

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் ஏ.பி.பி. நியூஸ் மற்றும் சி வோட்டர் அமைப்பு சார்பில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதன்படி பாரதிய ஜனதாவுக்கு சாதகமான சூழலே நிலவுகிறது. அந்தக் கட்சி 213 முதல் 221 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கணிப்பு தெரிவிக்கிறது.