பிரியங்கா வியூகம்

பிரியங்கா வியூகம்

2 mins read
d56ceeec-34f8-4b5a-839d-a897256d632b
-

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் சட்­ட­மன்­றத் தேர்­தல் பணி­களில் காங்­கி­ரஸ் கட்­சி­யின் பொதுச் செய­லா­ள­ரும் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத் தேர்­தல் பொறுப்­பா­ள­ரு­மான பிரி­யங்கா காந்தி (படம்) தீவி­ர­மாக ஈடு­பட்டுள்­ளார்.

அந்த மாநி­லத்­தில் தற்­போது யோகி ஆதித்­ய­நாத் தலை­மை­யில் பார­திய ஜன­தாக கட்­சி­யின் ஆட்சி நடை­பெற்று வரு­கிறது.

சட்­ட­மன்­றத்­தின் பத­விக்­கா­லம் முடி­வ­டைய இருப்­ப­தால் அங்கு அடுத்த ஆண்டு பிப்­ர­வரி, மார்ச் மாதத்­தில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடக்க உள்­ளது.

ஆட்­சியைத் தக்க வைக்க பாஜக பல்­வேறு யோசனைகளை அமைத்­துள்­ளது. இதற்­காக அங்கு பிர­த­மர் மோடி பல்­வேறு நலத்­திட்­டங்­க­ளைத் தொடர்ந்து தொடங்கி வைத்து வரு­கி­றார்.

காங்­கி­ரஸ் சார்­பில் பிரி­யங்கா காந்தி உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் முகா­மிட்டு தீவிர களப்­ப­ணி­யாற்றி வரு­கி­றார். இந்த முறை ஆட்­சியை எப்­ப­டி­யா­வது கைப்­பற்றி­ விட வேண்­டும் என்ற ஆர்­வத்­தில் அவர் நாள்­தோ­றும் பல்­வேறு வாக்­கு­று­தி­களை அளித்து வரு­கி­றார்.

பிரி­யங்­கா­வின் வாக்­கு­று­தி­கள் உத்­த­ரப் பிர­தேச மக்­களை வெகு­வாகக் கவர்ந்து வரு­வ­தாக சில ஊட­கங்­கள் குறிப்­பி­டு­கின்­றன. இதை வாக்­காக மாற்­றும் பணிக்­காக அவர் மாநிலம் முழு­வ­தும் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­கி­றார்.

இதை­யொட்டி அவர் மாவட்ட நிர்­வா­கி­க­ளைச் சந்­திக்க இருப்­ப­தாக உத்­த­ரப் பிர­தேச மாநில காங்­கி­ரஸ் கட்சி தெரி­வித்­துள்­ளது.

இந்த நிலை­யில் பிரி­யங்கா காந்தி நேற்றும் இன்றும் மாவட்ட நிர்­வா­கி­களைச் சந்­தித்துச் பேசும் வகையில் அவரது பயணத் திட்டம் வகுக் கப்பட்டிருந்தது.

ஆக்ரா, அலி­கார், மீரட் உள்­ளிட்ட 14 மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த காங்­கி­ரஸ் கட்சி நிர்­வா­கி­களை நேற்று அவர் சந்­தித்துப் பேசத் திட்­ட­மிட்­டி­ருந்­தார்.

அதன் பின்­னர் புலந்­த­ச­ரில் பிரி­யங்கா பேசு­வ­தற்கு பிரம்­மாண்ட பொதுக்­கூட்­டத்­திற்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்டு இருந்­தது.

இன்று (நவம்­பர் 15) அவர் மொர­தா­பாத், சக­ரன்­பூர், பரேலி உள்­பட 12 மாவட்ட நிர்­வா­கி­க­ளைச் சந்­தித்­துப் பேச உள்­ளார்.

இந்த இரு நாள் கலந்­து­ரை­யா­ட­லில் கட்­சி­யைப் பலப்­ப­டுத்­து­வது, வீதிவீதி­யாகச் சென்று மக்­க­ளைச் சந்­திப்­பது உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­கள் பற்றி பிரி­யங்கா விவா­திப்­பார் என மாநில காங்­கி­ரஸ் தலை­வர் அஜய் குமார் லல்லு கூறினார்.

உத்தரப் பிரதேச மாநில ஆட்சியைக் கைப்பற்ற தீவிர களப்பணி