பதில் சொல்லுங்கள், விருதை திருப்பித் தருகிறேன்: கங்கனா

புது­டெல்லி: எனது கேள்­விக்­குச் சரி­யான பதில் சொன்­னால் பத்­ம­ஸ்ரீ விரு­தைத் திருப்­பித் தந்­து­வி­டு­கி­றேன் என்று நடிகை கங்­கனா ரணா­வத் தெரி­வித்­துள்­ளார். அண்­மை­யில் தனி­யார் தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்­றில் அவர் பேசி­யது அர­சி­யல் ரீதி­யாக சர்ச்சை ஆனது. "1947ல் நம் நாடு பெற்­றது சுதந்­தி­ரம் அல்ல, பிச்சை. உண்­மை­யான சுதந்­தி­ரம் 2014ல் தான் கிடைத்­தது," என அவர் கூறி­யி­ருந்­தார். அவ­ரது இந்­தக் கருத்­துக்கு காங்­கி­ரஸ் உள்­பட பல்­வேறு கட்­சி­யி­ன­ரும் கடும் கண்­ட­னம் தெரி­வித்து வரு­கின்­ற­னர். அவ­ருக்கு வழங்­கப்­பட்ட பத்­ம­ஸ்ரீ விருதை திரும்­பப் பெற வேண்­டும் என்­றும் தேச துரோக வழக்­கில் அவரை கைது செய்ய வேண்­டும் என­வும் பல்­வேறு கட்­சி­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இதற்­குப் பதி­ல­டி­யாக கங்­கனா ரணா­வத் நேற்று பேசி­னார். "எனக்­குத் தெரிந்­த­வரை 1947ஆம் ஆண்டு எந்­தப் போரும் நடக்­க­வில்லை. நடந்­தி­ருந்­தால் அது­பற்றி யாரா­வது எனக்­குச் சொல்­லட்­டும். வெள்­ளை­யர்­கள் நாட்டை ஏன் பிரித்­த­னர்? 1947ல் சுதந்­தி­ரத்­தைக் கொண்­டா­டு­வ­தற்குப் பதில் மக்­கள் ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் அடித்­துக்­கொண்­டது ஏன்?

"எனது கேள்­விக்­கான பதில்­களை யாரா­வது சொல்­லட்­டும். அதன்­பின் 1947ல் பெற்ற சுதந்­தி­ரத்தை பிச்சை என கூறி­ய­தற்­காக பகி­ரங்­க­மாக மன்­னிப்­புக் கேட்டு, எனக்கு வழங்­கப்­பட்ட பத்­ம­ஸ்ரீ விரு­தை­யும் திருப்­பிக் கொடுத்­து­வி­டு­கி­றேன்," என அவர் கூறியுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!