திருப்பதி: கொரோனா பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் திருப்பதி மலைக்கு ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஐந்து மில்லியன் (50 லட்சம்) பக்தர்கள் திருப்பதியில் இருந்து திரு
மலைக்கு நடைபாதை வழியாக நடந்து சென்று ஏழுமலையா னைத் தரிசித்தனர். அனைத்துலக அளவில் பாதயாத்திரையாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, ஏழு
மலையானுக்கு மொட்டை போட்டுக்கொள்ளும் பக்தர்
களின் எண்ணிக்கை, திருமலை யில் இலவச உணவு பெறும் பக்தர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் திருப்பதி கோவில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதற்கான சான்றிதழை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலக சாதனைப் புத்தக இந்திய பிரதிநிதி சந்தோஷ் சுக்லா திருப்பதி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டியிடம் வழங்கினார்.

