டிசம்பர் மாதம் விமானப் பயணத் தடை நீங்கலாம்

டிசம்பர் மாதம் விமானப் பயணத் தடை நீங்கலாம்

1 mins read
4ff753dd-9756-4d26-9cb3-ffe761749c11
-

புதுடெல்லி: கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அனைத்துலக விமானப் பயணங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் நிலையில் இந்தி யாவுக்கு வெளிநாட்டுப் பயணி கள் வருவதற்கு ஏதுவாக 28 நாடுகளுடன் 'பபள் டிராவல்' எனப்படும் புரிந்துணர்வு ஒப் பந்தம் போடப்பட்டது. ஆயினும் தற்போது குறைவான விமானங் கள் இயக்கப்படுவதாலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதா லும் இந்தியாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. எனவே நவம்பர் 30ஆம் தேதி வரை நீடிக்கும் அனைத்துலக விமானப் பயணத் தடையை டிசம்பரில் மத்திய அரசு தளர்த் தக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.