ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தூக்கிலிட்டு கொலை: நக்சலைட்டுகள் கொடூரம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தூக்கிலிட்டு கொலை: நக்சலைட்டுகள் கொடூரம்

1 mins read
5a114f59-c83a-4a61-8c88-a8d463c2e90a
-

பாட்னா: நக்­ச­லைட் இயக்­கத்­தி­ன­ரால் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த நான்கு பேர் தங்­கள் வீட்­டின் முன் தூக்­கி­லி­டப்­பட்ட சம்­ப­வம் பீகா­ரில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

அங்­குள்ள மனோ­பார் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் சர்ஜு சிங். கடந்த ஆண்டு இவ­ரது வீட்­டில் தங்­கி­யி­ருந்த நக்­ச­லைட்­டு­கள் நான்கு பேர் காவல்­து­றை­யால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர்.

ஆனால், சர்ஜு சிங்­தான் நால்­வ­ரை­யும் உண­வில் விஷம் வைத்து கொன்­று­விட்­டார் என்­றும் அதன் பிறகே தக­வல் அறிந்து வந்த போலி­சார் நால்­வ­ரை­யும் சுட்­டுக்­கொன்­ற­தாக நாட­க­மாடி உள்­ள­னர் என்­றும் நக்­ச­லைட் இயக்­கத்­தி­னர் குற்­றம்­சாட்டி இருந்­த­னர்.

இந்­நி­லை­யில், இச்­சம்­ப­வம் நடந்த ஓராண்­டுக்­குப் பிறகு சர்ஜு சிங், அவ­ரது மனைவி, இரண்டு மகன்­கள் என நான்கு பேரை­யும் நக்­ச­லைட்­டு­கள் அவர்­க­ளின் வீட்­டின் முன்பே தூக்­கி­லிட்­டுக் கொன்­றுள்­ள­னர். பிறகு அவர்­க­ளு­டைய வீட்­டை­யும் குண்டு வைத்து தகர்த்­த­னர்.

மணிப்பூரில் பயங்கரம்

இதற்­கி­டையே, மணிப்­பூ­ரில் பயங்­க­ர­வா­தி­கள் நடத்­திய தாக்­கு­த­லில் துணை ராணு­வப்­படை அதி­கா­ரி­கள் உள்­ளிட்ட ஏழு பேர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர்.

துணை ராணு­வப்­படை அதி­காரி விப்­லாவ் திரி­பா­தியின் மனைவி, மக­னும் இதில் அடங்கு­வர். பயங்­க­ர­வா­தி­க­ளைப் பிடிக்க தேடு­தல் வேட்டை நடை­பெறுகிறது.