மும்பை: தம்மிடம் இருந்து ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
தாம் துபாயில் இருந்து கொண்டுவந்த கைக்கடிகாரங்களின் மதிப்பு ஒன்றரைக் கோடி ரூபாய் மட்டுமே என்றும் தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நானாக முன்வந்து சுங்கத்துறை அதிகாரிகளைச் சந்தித்து, நான் கொண்டுவந்த பொருள்களுக்கான சுங்க வரியைச் செலுத்த விரும்பினேன்.
"இதற்கு ஒத்துழைத்த அதிகாரிகள் அவற்றை மதிப்பீடு செய்து வருகின்றனர்," என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.