கவுஹாத்தி: சமூக வலைத்தளங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட குற்றச்சாட்டின் பெயரில் பெண் செய்தியாளர்கள் இருவரை அசாம் காவல்துறை கைது செய்துள்ளது.
திரிபுராவில் அண்மையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஆங்கில ஊடக பெண் செய்தியாளர்கள் சம்ருதி சுகன்யா, ஸ்வர்ணா ஆகிய இருவரும் வன்முறையை அடுத்து பள்ளிவாசல் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டனர்.
பின்னர் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குச் சென்று வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகத் தெரி கிறது. இதையடுத்து, அசாம் சென்றபோது இருவரும் கைதாகினர்.