நடிகர் புனித் ராஜ்குமாரைப் பின்பற்றி 15 நாள்களில் 6,000 பேர் கண் தானம்

நடிகர் புனித் ராஜ்குமாரைப் பின்பற்றி 15 நாள்களில் 6,000 பேர் கண் தானம்

1 mins read
5e4662b5-cd4c-47e0-b13d-92d72ec44419
-

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் கண்­தா­னம் செய்­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. கடந்த 15 நாள்­களில் மட்­டும் சுமார் ஆறா­யி­ரம் பேர் கண்­தானம் செய்­துள்­ள­னர்.

கன்­னட நடி­கர் புனித் ராஜ்­கு­மார் மறை­வுக்­குப் பிறகு உடல் உறுப்பு தானம் குறித்து கர்­நா­ட­கா­வின் கிரா­மப்­பு­றப் பகுதி­க­ளி­லும்­கூட விழிப்­பு­ணர்வு ஏற்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

இறக்­கும் முன்பே தமது கண்­களை தானம் செய்­வ­தாக புனித் ராஜ்­கு­மார் அறி­வித்திருந்தார்.

இறந்த பிறகு அவ­ரது இரு கண்­க­ளைக் கொண்டு நான்கு பேருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்ட­தில் அவர்­க­ளுக்­குப் பார்வை கிடைத்­துள்­ளது.

இது­கு­றித்து கேள்­விப்­பட்ட இளம் ரசி­கர்­கள் பலர் தங்­கள் அபி­மான நடி­க­ரைப் பின்­பற்ற கண்தானம் செய்ய முன்­வந்­துள்­ள­னர்.

இதன் கார­ண­மாக கடந்த 15 நாள்­களில் மட்­டும் ஆறா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கண் தானம் செய்­துள்­ள­தாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.