மும்பை: பெட்ரோல், டீசல் விலை அமெரிக்காவில்தான் முடிவு செய்யப்படுகிறது என மத்திய ரயில்வே இணையமைச்சர் ராவ்சாகேப் தன்வே கூறியுள்ளார்.
எனவே விலை உயர்வுக்கு மத்திய அரசை குறைகூறுவது நியாயமற்ற செயல் என அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டார்.
"பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள் இதைக் கவனித்துச் செயல்பட வேண்டும்," என்றார் அமைச்சர் ராவ்சாகேப்.