புதுடெல்லி: டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து டெல்லியில் காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் நடப்பாண்டில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு டெங்கி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 2,569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 5,277ஆக உள்ள நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து டெல்லி வந்துள்ள 470 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் மொத்த எண்ணிக்கையில் இவர்கள் சேர்க்கப்படவில்லை.
கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட போதிலும் டெல்லி மக்களின் நிம்மதி நீடிக்கவில்லை.
அண்மைய சில வாரங்களாக அங்கு காற்று மாசு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் டெங்கி பாதிப்பு புதுக்கவலையாக உருவெடுத்து வருகிறது.