சண்டவுலி: உத்தரப் பிரதேச மாநிலம் சண்டவுலி ரயில் நிலையம் அருகே அலகாபாத் முதல் தீன்தயாள் உபாத்யாயா வரை செல்லும் சரக்கு ரயில் ஒன்று நேற்றுக் காலை தடம் புரண்டது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்கு வரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. காலை 6.40 மணியளவில் நிகழ்ந்த விபத்துக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.
எட்டுப் பெட்டிகள் தடம் புரண்டபோதிலும் பயணிகள் இல்லா சரக்கு ரயில் என்பதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறினர்.