'கொரோனா எதிர்ப்புப் போருக்கு வரலாற்றில் இடம்'

'கொரோனா எதிர்ப்புப் போருக்கு வரலாற்றில் இடம்'

1 mins read
95db4be2-e338-4a2a-bee0-becc66bc6d07
-

சிம்லா: இந்திய அவைத்தலை வர்கள் மாநாட்டை பிரதமர் மோடி காணொளி வழியாக நேற்றுக் காலை தொடங்கி வைத்துப் பேசினார்.

"ஜனநாயகம் என்பது இந்தியாவின் இயல்பு. நாட்டை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு வரும் முயற்சி செய்தால் மட்டுமே இது நிறைவேறும். கடந்த சில ஆண்டுகளில் அனைவரின் முயற்சியால் எண்ணற்ற பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதற்கு மிகப்பெரிய உதாரணம் கொரோனா.

"அனைத்து மாநிலங்களை யும் ஒருங்கிணைத்து கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியா நடத்தியது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. தற்போது இந்தியா 110 கோடிக்கும் மேல் தடுப்பூசி களைச் செலுத்தி மைல்கல்லை கடந்துள்ளது. ஒரு காலத்தில் சாத்தியமில்லை என நினைத்த ஒன்று, இப்போது சாத்தியமா கிறது," என்றார் அவர்.