நாடாளுமன்றம் கூடுகிறது: வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம்

நாடாளுமன்றம் கூடுகிறது: வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம்

1 mins read
ef3793be-8cf1-4b47-97a7-9d2f91b8620a
-

புது­டெல்லி: நாடா­ளு­மன்ற குளிர்­கா­லக் கூட்­டத்­தொ­டர் வரும் 29ஆம் தேதி தொடங்கி டிசம்­பர் மாதம் 23 ஆம் தேதி வரை நடை­பெ­ற­வுள்­ளது.

திரும்­பப் பெறப்­ப­டு­வ­தாக பிர­த­மர் மோடி நேற்று அறி­வித்த மூன்று வேளாண் சட்­டங்­களை ரத்து செய்­வது தொடர்­பாக இந்­தக் கூட்­டத்­தொ­ட­ரில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­ப­ட­லாம் என்று நம்­பப்­ப­டு­கிறது.

கொரோனா விதி­மு­றை­க­ளைப் பின்­பற்றி கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளாக நடை­பெற்று வரும் கூட்­டத் தொடரைப் போலவே, குளிர்­காலக் கூட்­டத்­தொ­ட­ரும் நடை­பெ­ற­வுள்­ளது. நோய்ப் பர­வல் கார­ண­மாக கடந்த ஆண்டு குளிர்­கால கூட்­டத்­தொ­டர் நடத்­தப்­ப­டாத நிலை­யில், தற்­போது 20 நாட்­கள் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

உத்­த­ரப் பிர­தே­சம் உள்­ளிட்ட ஐந்து மாநில சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நெருங்­கும் நிலை­யில், இந்த கூட்­டத்தொடர் கூட­வுள்­ள­தால், மிகுந்த முக்­கி­யத்­து­வம் வாய்ந்த முடி­வு­கள் எடுக்­கப்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அதே நேரம் பெட்­ரோல், டீசல் விலை உயர்வு, சமை­யல் எண்­ணெய் விலை அதி­க­ரிப்பு, காஷ்­மீ­ரில் பொது­மக்­களை குறி­வைத்து பயங்­க­ர­வா­தி­கள் நடத்­திய தாக்­கு­தல், உத்­த­ரப் பிர­தே­சத்­தில் விவ­சா­யி­கள் மீது கார் ஏற்றி கொலை செய்­த­தில் வெடித்த வன்­முறை போன்ற பிரச்­சி­னை­கள் இந்­தக் கூட்­டத்­தொ­ட­ரில் வலு­வாக எதி­ரொ­லிக்­கும் என கூறப்படு­கிறது.