தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் ஆகத் தூய்மையான நகர்

1 mins read
694f70eb-ac37-43d7-9fc7-2bd3b18d32d9
இந்தியாவின் ஆகத் தூய்மையான நகர் என்ற பெருமையை மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகர் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பெற்றுள்ளது. படம்: பிடிஐ -

இந்தியாவின் ஆகத் தூய்மையான நகரம் என்ற பெருமையை மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகர் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பெற்றுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் குஜராத்தின் சூரத், ஆந்திராவின் விஜயவாடா நகர்கள் வந்தன.

நாட்டிலேயே மிகத் தூய்மையான மாநிலம் என்ற பெருமையை சட்டீஸ்கர் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 2021ஆம் ஆண்டுக்கான சுவச் சுர்வேக்‌ஷான் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

தேசிய அளவிலான இந்தத் துப்புரவு ஆய்வு, 28 நாள்களில் 4,320 நகர்களை உள்ளடக்கியது. இதில் 4.2 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துகளை வழங்கினர்.