202 நாள் கொரோனா சிகிச்சை

202 நாள் கொரோனா சிகிச்சை

1 mins read
eb109ede-6c5c-48a6-90d9-df241f5ddb10
-

குஜராத்: குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 202 நாட்கள் கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண்ணை உறவினர்கள் (படம்) ஆர வாரத்துடன் வரவேற்றனர். கடந்த மே 1ஆம் தேதி பாதிக்கப்பட்ட கீதா தர்மிக், 45, தாஹோட் நகர ரயில்வே மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். ஒரு வாரத் திற்குள் கீதாவின் உடல் நிலை மோசமடைந்ததால் அவர் வதோதரா நகர தனி யார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மே 24ஆம் தேதி மருத்துவர்களின் ஆலோ சனையின்படி அவர் மீண்டும் தாஹோட் ரயில்வே மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் சுவாசச் கருவி உதவியுடன் 202 நாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று அவர் குணமடைந்துள்ளார்.