தென்னிந்தியாவில் 30 பேர் பலி, காணவில்லை

2 mins read
be0a8997-8b2b-46a8-ab87-aba9ebe0bd36
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சித்ராவதி ஆற்றில் சிக்கிய பத்து பேரை ஹெலிகாப்டர் மூலம் இந்திய விமானப் படை மீட்டது. படம்: இந்திய விமானப்படை/ டுவிட்டர் -

தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் கடும் மழை, வெள்ளம்

சென்னை: தென் இந்­திய மாநி­லங்­களில் அண்­மை­யில் பெய்த கனத்த மழை, அத­னால் ஏற்­பட்ட வெள்­ளம் கார­ண­மாக 30 பேர் வரை உயி­ரி­ழந்­தி­ருக்­க­லாம் என அஞ்­சப்­ ப­டு­கிறது.

ஒரு சம்­ப­வத்­தில் மூன்று பேருந்­து­கள் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­டன.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை கடப்பா மாவட்­டம், ராஜம்­பேட்­டை­யில் சத்­ய­வதி நதி­யின் அருகே நந்­த­லூ­ரில் மூன்று அர­சுப் பேருந்­து­கள் வெள்ளத்­தில் சிக்­கிக்­கொண்­டன.

இதி­லி­ருந்து 12 பேர் சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­ட­னர். திருப்­பதி, நெல்­லூ­ரில் மேலும் ஐந்து பேர் என மொத்­தம் 17 பேர் வெள்­ளத்­தில் சிக்­கி­யும் மின்­சா­ரம் தாக்­கி­யும் இறந்­துள்­ள­னர். 30க்கும் மேற்­பட்­டோர் காண­வில்லை.

தமிழ்­நாட்­டுக்கு அடுத்­ததாக ஆந்­திரா மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

வங்­கக் கட­லில் ஏற்­பட்ட காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­லம் சென்னை அருகே கரையைக் கடந்­தது. இது ஆந்­தி­ரா­வில் நிலை கொண்­ட­தால், சித்­தூர், நெல்­லூர், கடப்பா, அனந்­த­பூர் ஆகிய 4 மாவட்­டங்­களில் கன­மழை பெய்து வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது. பல ஏரி­கள் உடைந்து பயிர்­கள் நீரில் மூழ்­கி­யுள்­ளன. சித்­தூர் மாவட்­டத்­தில் நீவா நதி­யில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டது. இதில் சித்­தூ­ரில் ஏரா­ள­மான ஆடு, மாடு­கள் மக்­க­ளின் கண்முன்னே நீரில் அடித்­துச் செல்­லப்பட்­டன.

கல்­யாணி அணை நிரம்­பி­ய­தால், 2 மத­கு­கள் திறக்­கப்­பட்­டன. இத­னால் சுவர்­ண­முகி நதி­யில் திருப்­பதியில் இருந்து நெல்­லூர் மாவட்­டம் தடா வரை வெள்­ளப்பெருக்கு ஏற்­பட்­டது. கார்­கள், இரு சக்கர வாகனங்கள், கால்­ந­டை­கள் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்பட்­டன.

அனந்­த­பூர் மாவட்­டத்­தில் கார் வெள்­ளத்­தில் சிக்­கி­ய­தால் அதில் தவித்த 4 பேரை காப்­பாற்ற 6 பேர் சென்­ற­னர். பிறகு அவர்­களும் வெள்­ளத்­தில் சிக்­கி­னர். பிறகு பத்து பேரும் ஹெலி­காப்­டர் மூலம் மீட்கப்­ பட்­ட­னர். திரு­ம­லை­யில் எங்கு பார்த்­தா­லும் வெள்­ளம் பெருக்­ கெடுத்து ஓடு­கிறது.

இந்நிலை­யில் கனத்த மழை மேலும் சில நாட்­க­ளுக்கு நீடிக்­க­லாம் என முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே பிர­த­மர் மோடி­யி­டம் தொலை­பேசி வழி­யா­கப் பேசிய ஆந்­திர முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி, மழை, வெள்ள பாதிப்­பு­கள் குறித்து பிர­த­ம­ரி­டம் விளக்­கி­னார். அப்­போது, ஆந்­தி­ரா­வுக்­குத் தேவை­யான அனைத்து உத­வி­களும் வழங்­கப்­படும் என்று பிர­த­மர் மோடி உறு­தி­ய­ளித்­தார்.