லக்னோ: கிருமித்தொற்று காலத்தில் போலிசார் ஆற்றிய பணி பாராட்டுக்குரியது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
அதே சமயத்தில் மத்திய, மாநில அமைப்புகளைச் சேர்ந்த போலிசாருக்கு இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக் னோவில் நேற்று டி.ஜி.பி. மற்றும் ஐ.ஜி.க்கள் மாநாட்டை தொடங்கி வைத்து அமித் ஷா பேசினார்.
கொரோனா தொற்று காலத்தில் மாநில போலிசாரும் மத்திய ரிசர்வ போலிஸ் படையைச் சேர்ந்த போலிசாரும் தங்களைப் பற்றி கவலைப் படாமல் மக்களுக்கு சேவையாற்றினர் என்றார் அவர்.
"மத்திய, மாநில போலிசார் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு உட்பட பல்வேறு பிரச்னைகளிலும் மக்களுக்கு சிறப்பாகப் பணியாற்ற முடியும்.
"பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்க ஒத்துழைப்பு மிகவும் அவசியம்," என்று அமைச்சர் வலியுறுத் தினார்.
அனைத்து மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள், மத்திய ஆயுதப் படைகளின் இயக்குநர்கள் பங்கேற்கும் 56வது மாநாடு லக்னோவில் உள்ள உத்தரப்பிரதேச காவல்துறை தலைமையகத்தில் நேற்றும் இன்றும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இதில் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார்.