புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு அறிகுறி உள்வர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 'ஆயுஷ்-64' மாத்திரைகளைத் தயாரிக்க 46 நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
முன்னதாக, இம்மாத்திரைகளை ஏழு நிறுவனங்கள் மட்டுமே தயாரித்து வந்தன. எனினும், அண்மைக் காலமாக லேசான தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் இம்மாத்திரையால் விரைவில் குணமடைந்தனர். வீட்டில் சிகிச்சை பெற்று வந்த 63 ஆயிரம் பேர் குணமடைந்ததை அடுத்து, இதன் உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாக மத்திய ஆயுஷ் அமைச்சு புதிய நிறுவனங்களுக்கும் இவற்றைத் தயாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.