புதுடெல்லி: இந்திய அளவில் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியல் காவல் நிலையம் இடம்பெற்றுள்ளது. பட்டியலில் அது எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
தரவுப் பகுப்பாய்வு, நேரடிக் கண்காணிப்பு, பொதுமக்களின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய அளவில் சிறப்பாகச் செயல்படும் பத்து காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான பட்டியலை உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. அதில் பத்து சிறந்த காவல் நிலையங்களில் தமிழகத்தில் உள்ள தொட்டியம் காவல் நிலையம் இடம்பெற்றது.
இந்தக் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் மோகன்ராஜ், இரண்டு உதவி ஆய்வாளா்கள், ஒரு சிறப்பு உதவி ஆய்வாளா் உட்பட 30 பேர் பணிபுரிகின்றனர்.