புதுடெல்லி: பாகிஸ்தான் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது.
அப்போது இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமானத்தை அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தினார்.
அவருக்கு நேற்று இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி சிறப்பித்தார்.
மேலும் பல்வேறு வீரச் செயல்களில் ஈடுபட்ட பல ராணுவ அதிகாரிகளுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

