கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் நீடிக்கும் கனமழை பாதிப்பு

திரு­வ­னந்­தபுரம்: கேரளா, ஆந்­திரா, கர்­நா­டகா ஆகிய மூன்று மாநிலங்­க­ளி­லும் மழை பாதிப்பு நீடித்து வரு­கிறது. கேர­ளா­வில் மழை இன்னும் ஓய­வில்லை. ஆந்­தி­ரா­வி­லும் கர்நாடகா­வி­லும் மழைக்குப் பலி­யா­னோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

அர­பிக்­க­டல் பகு­தி­யில் மேலும் ஒரு காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­லம் உரு­வா­னதை அடுத்து கேர­ளா­வில் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு கன­ம­ழைக்­கான மஞ்­சள் எச்­ச­ரிக்­கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­பு­திய காற்­ற­ழுத்­தம் மிக விரை­வில் புய­லாக மாறக்­கூ­டும் என இந்­திய வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

நவம்­பர் 25ஆம் தேதி வரை பத்­த­னம்­திட்டா, ஆலப்­புழா, கோட்­ட­யம், இடுக்கி, எர்­ணா­கு­ளம் மாவட்­டங்­களில் இடி­யு­டன் கூடிய பலத்த மழை பெய்­யும் என்­ப­தால் அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

திரு­வ­னந்­த­பு­ரம், கொல்­லம், மலை­யோர மாவட்­டங்­க­ளி­லும் பலத்த மழை பெய்­யும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது. மீண்­டும் நிலச்­ச­ரி­வு­கள் ஏற்­ப­ட­லாம் என பொது­மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, ஆந்­தி­ரா­வில் மழை தொடர்­பான சம்­ப­வங்­களில் இது­வரை 41 பேர் உயி­ரி­ழந்­து­விட்டனர்.

சித்­தூர் மாவட்­டத்­தில் திருப்­பதி அருகே ராய­ல­செ­ருவு ஏரிக்­க­ரை­யில் கசிவு ஏற்­பட்­டதை அடுத்து, கரை­யோ­ரத்­தில் உள்ள நூற்­றுக்­கும் மேற்­பட்ட கிரா­மங்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. பொது­மக்­கள் துரித கதி­யில் வெளி­யேற்­றப்­பட்டு, பாது­காப்­பான இடங்­களில் தங்கவைக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

இந்த ஏரியின் கரையில் உடைப்பு ஏற்படும் பட்சத்தில் திருப்பதி பகுதியில் பெரும் சேதங்கள் ஏற்படக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள். காளஹஸ்தியில் 80 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகாவின் சில பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. பெங்களூரு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மீண்டும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நவம்பர் மாதத்தில் மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் 24 பேர் இறந்துவிட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!