'பூஸ்டர் தடுப்பூசி போடும் அவசியம் எழவில்லை'

'பூஸ்டர் தடுப்பூசி போடும் அவசியம் எழவில்லை'

1 mins read
505ca63b-b9d4-4339-8cb1-b5d32239db22
-

புது­டெல்லி: நாட்­டில் 80 விழுக்­காடு மக்­க­ளுக்கு இரண்டு தடுப்­பூசி­களும் போடு­வதே முதல் இலக்கு என்று இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்­றத்­தின் தொற்று நோய்ப் பிரிவின் தலை­வர் சமி­ரன் பாண்டா தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வில் தற்­போ­தைக்கு கொரோனா பூஸ்­டர் தடுப்­பூ­சி­கள் போட வேண்­டிய அவ­சி­யம் எழ­வில்லை என்­றும் அவர் கூறியுள்­ளார்.

இரண்டு தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு பூஸ்­டர் தடுப்­பூசி போட வேண்­டும் என ஒரு தரப்­பி­னர் வலி­யு­றுத்­து­கின்­ற­னர். எனி­னும் மத்­திய அரசு இது­கு­றித்து ஏதும் அறி­விக்­க­வில்லை.

இந்­நி­லை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய சமி­ரன் பாண்டா, பூஸ்­டர் ஊசி போடு­வது தொடர்­பாக நாடு முழு­வ­தி­லும் இருந்து பெறப்­படும் அறி­வி­யல்­பூர்­வ­மான மருத்­துவ ஆதா­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில் மட்­டுமே முடிவு எடுக்க முடி­யும் என்­றார்.

தற்­போது கிடைத்­துள்ள தரவு­க­ளின் அடிப்­ப­டை­யில் பூஸ்­டர் தடுப்­பூசி போடு­வ­தற்­கான அவ­சி­யம் இப்­போது எழ­வில்லை என்­றும் தெரி­வித்­தார்.