தெரு உணவு என வரும்போது, இந்தியாவில் ஒவ்வொரு மூலையிலும் மாறுபட்ட உணவு வகைகளைப் பார்க்கலாம்.
இவ்வாண்டு மார்ச் மாதம், உத்தரப் பிரதேசத்தில் தெரு உணவு விற்பனையாளர் ஒருவர் சமைத்த விதம், புருவங்களை உயர்த்த வைத்தது.
மண் நிறைந்த வாணலியில் ‘பூனா ஆலு’ எனும் உணவை அந்த அவர் சமைப்பதைக் காட்டும் காணொளி அப்போது பரவலானது.
எண்ணெய் இல்லாமல் சூடான மண்ணில் அவர் உருளைக்கிழங்குகளை வறுத்தது, இணையவாசிகளை ஆச்சரியப்பட வைத்தது.
இப்போது, அதே பாணியில் டெல்லியில் ஒருவர் தக்காளியை மண்ணில் வறுத்து வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
அக்காணொளி இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் இருந்து, 17.1 மில்லியனுக்கு அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும், 506,000க்கும் மேற்பபட்டோர் அது பிடித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மண் நிறைந்த வாணலியில் அந்த இளையர் தக்காளிகளை வறுக்கிறார்.பின்னர், குளிர்ந்த தண்ணீர் உள்ள வாளியில் அவற்றைக் கொட்டுகிறார். தக்காளித் தோலை உரித்து, அதை வெட்டி சட்னி மசாலாவுடன் இலையில் பரிமாறுகிறார்.
அந்தக் காணொளியை இங்கு காணலாம்: