1½ ஆண்டில் குறைந்த பாதிப்பு

2 mins read
ba5c072e-c981-41a6-83b3-f4302c3783e1
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் நேற்­றுக் காலை வரை­யி­லான கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 7,579 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு அறி­வித்­தது.

கடந்த 543 நாள்­களில், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளில் ஒரேநா­ளில் பதி­வான ஆகக் குறை­வான கொரோனா பாதிப்பு இது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பண்­டி­கைக் காலம் என்­ற­

போ­தும் கொரோனா பாதிப்பு உய­ரா­த­தற்கு அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தும் உட­லில் 'ஆன்­டி­பாடி' எனப்­படும் நோயெ­திர்ப்­பான்­கள் உரு­வா­ன­துமே கார­ணம் எனக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த அக்­டோ­பர் மாதத்­தில் துர்க்கா பூஜை, இம்­மா­தத்­தில் தீபா­வளி என முக்­கி­ய பண்­டி­கை­

க­ளைக் கொண்­டா­டு­வ­தற்­காக, பொருள்­கள் வாங்­க­வும் குடும்­பத்­தி­ன­ரைச் சந்­திக்­க­வும் பல கோடி மக்­கள் பெரும்­பா­லும் முகக் ­க­வ­சம் அணி­யா­ம­லேயே வெளி­யில் நட­மா­டி­னர்; பய­ணம் செய்­த­னர்.

பெரு­ந­க­ரங்­க­ளைத் தவிர மற்ற ஊர்­களில் முகக்­க­வ­சம் அணி­யும் பழக்­கம் கிட்­டத்­தட்ட அறவே இல்­லா­மல் போய்­விட்­ட­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

"தீபா­வ­ளிக்­குப் பிற­கும்­கூட கிரு­மித்­தொற்று உய­ர­வில்லை," என்­றார் தேசிய தொற்­று­நோ­யி­யல் நிலை­யத்­தின் முன்­னாள் இயக்­கு­நர் டாக்­டர் எம்.டி.குப்தே.

இயற்­கை­யா­கவே நோய் தொற்­றி­ய­தன்­மூ­லம் பெரும்­பா­லான இந்­தி­யர்­க­ளின் உட­லில் நோயெ­திர்ப்­பான்­கள் உரு­வா­னதே இதற்கு முக்­கி­யக் கார­ணம் என்று டாக்­டர் குப்தே குறிப்­பிட்­டார்.

இவ்­வாண்டு ஜூலை மாதம்­வரை, கிட்­டத்­தட்ட 70% இந்­தி­யர்­களை இயல்­பா­கவே கிருமி தொற்றி­ விட்­ட­தாக அர­சாங்­கக் கருத்­தாய்­வு­கள் மதிப்­பிட்­டுள்­ளன.

இது­வரை, இந்­தி­யா­வில் 18 வய­திற்கு மேற்­பட்ட 944 மில்­லி­யன் பேரில் 81 விழுக்­காட்­டி­னர் குறைந்­தது முதல் தவணை தடுப்­பூ­சி­யும் 43 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­க­வும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.18 வய­திற்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­வது இன்­னும் தொடங்­கப்­ப­ட­வில்லை.

இந்தியாவில் கொரோனா பரி சோதனை செய்வதும் குறைந்து வருகிறது.

தடுப்பூசியும் நோயெதிர்ப்பு ஆற்றலும் தொற்றுப் பரவல் அபாயத்தைக் குறைப்பதாகத் தகவல்