இந்தியாவிடம் $500 மி. கடன் கேட்கிறது இலங்கை

கொழும்பு: எரி­பொ­ருள் இறக்­கு­மதி செய்­வ­தற்­காக இந்­தி­யா­வி­டம் இருந்து $500 மில்­லி­யன் கடன் வாங்க இலங்­கை திட்­ட­மிட்­டுள்­ளது. இதற்­காக இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி­யி­டம் பேச்­சு­வார்த்தை நடத்த இலங்கை நிதி அமைச்­சர் பசில் ராஜ­பக்சே இரண்­டொரு நாளில் புது­டெல்லி வரு­கி­றார்.

அவ­ரது பய­ணத் திட்­டத்தை இலங்கை வெளி­யு­றவு அமைச்­சர் ஜி.எல் பெரில் நேற்று முன்­தி­னம் அறி­வித்­தார். இலங்­கைக்­கான இந்­தி­யத் தூத­ரி­டம் பசி­லின் பய­ணத் திட்­டம் தரப்­பட்­டுள்­ளது. இந்­தி­யா­வி­டம் கடன் வாங்­கு

­வ­தோடு இலங்­கை­யில் இந்­தி­யா­வின் முத­லீட்டை அதி­க­ரிப்­பது தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­யி­லும் பசில் ஈடு­ப­டு­வார் என்­றார் திரு பெரிஸ். இலங்கை தற்­போது கடு­மை­யான அந்­நி­யச் செலா­வ­ணிப் பற்­றாக்­கு­றை­யில் சிக்­கித் தவிக்­கிறது.

அத­னால் அந்­நாடு தனக்­குத் தேவை­யான கச்சா எண்­ணெய்யை வாங்க இய­ல­வில்லை. நாட்­டில் உள்ள ஒரே கச்சா எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­தி­ன் உற்­பத்­தி­யும் அண்­மை­யில் நிறுத்­தப்­பட்­டது. கொரோனா தொற்று, உணவுப் பொருள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு போன்றவையும் இலங்கையை வாட்டுகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!