கர்த்தார்பூர்: இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டு 1947ல் பாகிஸ்தான் தனி நாடாக்கப் பட்டபோது பிரிந்த நண்பர்கள் இருவர், 74 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நேரில் சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியானதாக அமைந்தது. 'கர்த்தார்பூர் பயணத்தடம்' என்ற விசா விலக்குப் பெற்ற சமயப் பய ணம் மூலம், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானின் கர்த்தார்பூர் சீக்கியக் கோவிலுக்குச் சென்றார் கோபால் சிங், 94. அப்போது சிறு வயதில் பிரிந்த முகம்மது பஷீர், 91, என்ற தம் நண்பரை அங்கு எதிர்பாராத விதமாகச் சந்தித்து மகிழ்ந்தார். திரு பஷீர், பாகிஸ்தானின் நரோ வால் நகரில் வசிக்கிறார்.
74 ஆண்டுகளுக்குப் பின் சேர்ந்த நட்பு
1 mins read
-

