புதுடெல்லி: இந்தியாவின் ஸ்ரீநகரில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் காஷ்மீர் சென்றிருந்தபோது குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். அப்போது விலையுயர்ந்த நகையைத் தொலைத்துவிட்டனர். அவர்களுக்குக் குதிரை சவாரி வழங்கிய ரஃபீக், அஃப்ரோஸ் என்னும் குதிரைக்காரர்கள் காஷ்மீரின் பாகல்கம் என்னும் இடத்தில் அந்த
நகைகளைக் கண்ெடடுத்தனர். பின்னர் அவ்விருவரும் 70 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ஸ்ரீநகரிலுள்ள குடும்பத்தினரிடம் நகைகளைக் கொடுத் தனர்.

