இளையர் ஒருவரின் துணிச்சல் செயல் குறித்த காணொளி தற்போது பரவலாகி வருகிறது.
ஹைதராபாத்த்தில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவிற்கு வந்த இளையர் ஒருவர், திடீரென அங்குள்ள சிங்க குகைக்கு மேல் எறினார். பாறைகள் மேல் லாவகமாக நடந்து சென்ற அந்த இளையர், மெல்ல மெல்ல நகர்ந்து குகைக்குள் குதிக்க முயற்சி செய்தார்.
இதைக் கண்ட பூங்கா நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பார்வையாளர்கள் அனைவரும் பயத்தில் உறைந்திருக்க, அந்த இளையரை வேட்டையாட சிங்கமும் தயாராகிவிட்டது.
அப்போது சுதாரித்துக்கொண்ட பூங்கா காப்பாளர்கள், சிங்கத்தின் குகை கதவைத் திறந்து அதை திசை திரும்பினர். பின்னர் அங்கு வந்த போலிசார் பாறைகள் மீதிருந்த இளையரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.