கவுதம் கம்பீருக்கு ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ கொலை மிரட்டல்

புதுடெல்லி: பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீருக்கு (படம்) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவரது வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பயங்கரவாத அமைப்பு இந்த மிரட்டலை விடுத்துள்ளது.

கிழக்கு டெல்லி தொகுதி எம்பியான கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவரது தரப்பு காவல்துறையில் புகார் அளித்தது. இதையடுத்து அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகப் போலிசார் தெரிவித்தனர்.

அந்த மிரட்­டல் மின்­னஞ்­சல் தொடர்­பாக டெல்லி போலி­சார் தீவிர விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர். ‘ஐஎஸ்­ஐ­எஸ்’ அமைப்பு சிரியா, ஈராக், ஆப்­கா­னிஸ்­தான் உள்­பட பல்­வேறு நாடு­களில் தீவி­ர­மா­கச் செயல்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், ‘ஐஎஸ்­ஐ­எஸ் காஷ்­மீர்’ என்ற புதுப்­பெ­ய­ரில் மிரட்­டல் வந்­துள்­ளது. இதை­ய­டுத்து காஷ்­மீ­ரில் அந்­தப் பெய­ரில் புதிய பயங்­க­ர­வாத அமைப்பு செயல்­ப­டத் துவங்­கி­யுள்­ளதா என்று உள­வுத்­துறை, பாது­காப்­புத்­துறை அதி­காரி­கள் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!