புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றுள் மின்னிலக்க பணம் என்று குறிப்பிடப்படும் 'கிரிப்டோகரன்சி'களுக்கு தடை விதிக்கும் மசோதாவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் எனத் தெரிகிறது.