திரிபுரா: பாஜகவினர் மிரட்டல்; எதிர்க்கட்சிகள் சாடல்

திரிபுரா: பாஜகவினர் மிரட்டல்; எதிர்க்கட்சிகள் சாடல்

1 mins read
58dc7529-2b72-40cd-aa87-93928efb2b47
-

அகர்­தலா: திரி­புரா உள்­ளாட்­சித் தேர்­தல் வாக்­குப்­ப­தி­வின்­போது பாஜ­க­வி­னர் தங்­கள் வேட்­பா­ளர்­களை மிரட்­டி­ய­தாக எதிர்க்­கட்­சி­கள் குற்­றம்­சாட்­டின

வாக்­குச்­சா­வ­டி­க­ளுக்கு பாஜ­க­வி­னர் இரு­சக்­கர வாக­னங்­களில் வந்­த­தா­க­வும் சில இடங்­களில் வாக்­கா­ளர்­களை வாக்­க­ளிக்­க­வி­ட­வில்லை என்­றும் எதிர்க்­கட்­சி­கள் தரப்­பில் புகார்­கள் எழுந்­துள்­ளன.

மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட், திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யினர் இது தொடர்­பாக தேர்­தல் ஆணை­யம் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என வலி­யு­றுத்தி உள்­ளன.

திரி­பு­ரா­வில் நேற்று உள்­ளாட்­சித் தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது. அப்போது அடை­யா­ளம் தெரி­யாத பலர் தலைக்­க­வ­சம், முகக்­க­வ­சம் அணிந்துகொண்டு, வீடு வீடா­கச் சென்று எதிர்க்­கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளிக்­கக் கூடாது என மிரட்­டல் விடுத்­த­தாக மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் சாடி உள்­ளது.