புதுடெல்லி: காற்று மாசு தொடர்ந்து மோசமாக இருப்பதை அடுத்து டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்றார் அவர்.
டெல்லியில் நேற்று நிலவிய புகைமூட்டம். படம்: ஏஎஃப்பி