புதுடெல்லி: கொரோனா தொற்றுக் காலத்தின்போது மருத்துவமனையில் படுக்கையும் செயற்கை சுவாச வசதியும் கிடைக்கவில்லை என குஜராத் மக்கள் குற்றம்சாட்டுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆனால் மத்திய அரசோ உண்மைக்கு நேர்மாறாக நாட்டிலேயே மிகச்சிறந்த மாநிலமாக குஜராத்தை சுட்டிக்காட்டுவதாக அவர் சாடி உள்ளார்.
குஜராத்தில் கொரோனாவால் 10 ஆயிரம் பேர் மட்டுமே இறந்ததாக அம்மாநில அரசு கூறுவது பொய் என்று குறிப்பிட்டுள்ள அவர், அம்மாநிலத்தில் முந்நூறாயிரம் பேர் தொற்றுப் பாதிப்பால் இறந்துள்ளனர் என்பதுதான் உண்மை என்று கூறியுள்ளார்.
இதை நிரூபிக்க காங்கிரஸ் கட்சியினர் அங்கு வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து வருவதாகவும் விரைவில் உண்மை நிலவரம் தெரியவரும் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.