தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறையத் தொடங்கியுள்ள இந்திய மக்கள்தொகை

2 mins read
66e9069f-7d30-48fd-a37a-02cc21c8697f
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் மக்­கள் ­தொகை குறை­யத் தொடங்­கி­ இருப்­பதை அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு 24ஆம் தேதி வெளி­யிட்ட தேசிய குடும்ப சுகா­தா­ரக் கணக்­கெ­டுப்பு தெரி­விக்­கிறது.

அந்­தக் கணக்­கெ­டுப்­பின்­படி, சரா­ச­ரி­யாக பெண் ஒரு­வர் பெற்றுக்­கொள்­ளும் குழந்­தை­க­ளின் எண்­ணிக்கை, அதா­வது மொத்­தக் கருத்­த­ரிப்பு விகி­தம் 2.2லிருந்து 2ஆகக் குறைந்­துள்­ளது.

சரா­ச­ரி­யாக, ஒரு பெண் 2.1 குழந்­தை­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளும்­போது அந்­நாட்­டின் பிறப்பு விகி­த­மும் இறப்பு விகி­த­மும் சம அள­வில் இருக்­கும் என்­றும் அப்­படி இருக்­கும்­போது ஒரு நாட்­டின் மக்­கள்­ தொ­கை­யில் மாற்­ற­மி­ராது என்­றும் ஐக்­கிய நாட்டு நிறு­வனத்­தின் மக்­கள்­தொ­கைப் பிரிவு விளக்கு­கிறது.

இந்­நி­லை­யில், பதி­லீடு கருத்­தரிப்பு விகி­தம் இந்­தி­யா­வில் 2ஆகக் குறைந்­து­விட்­ட­தால், மக்­கள்­தொகை­யும் குறை­யத் தொடங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மாநில அள­வி­லான மொத்த கருத்­த­ரிப்பு விகி­தத்தை (டிஎ­ஃப்­ஆர்) அந்­தக் கணக்­கெ­டுப்பு பட்­டி­ய­லிட்­டுள்­ளது. அதன்­படி, பீகார் (3), மேகா­லயா (2.9), உத்­த­ரப் பிர­தே­சம் (2.4), ஜார்க்­கண்ட் (2.3), மணிப்­பூர் (2.2) ஆகிய மாநி­லங்­களில் அவ்­வி­கி­தம் அதி­க­மாக உள்­ளது.

தமிழ்­நாட்­டில் 2015-16 கால­கட்­டத்­தில் 1.7ஆக இருந்த மொத்த கருத்­த­ரிப்பு விகி­தம், 2019-21 கால­கட்­டத்­தில் 1.8ஆகக் கூடி­விட்­டது.

ஆகக் குறை­வாக, ஜம்மு-காஷ்­மீ­ரில் அவ்­வி­கி­தம் 1.4ஆக உள்­ளது.

முதன்­மு­றை­யாக, இந்­தி­யா­வில் ஆண்­க­ளை­விட பெண்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருப்­பது கணக்­கெ­டுப்­பின்­மூ­லம் தெரி­ய­வந்­துள்­ளது. இப்­போ­தைக்கு, 1,000 ஆண்­க­ளுக்கு 1,020 பெண்­கள் உள்­ள­னர்.

இந்தியாவின் இப்போதைய மக்கள்தொகை கிட்டத்தட்ட 140 கோடி. உலக மக்கள்தொகையில் இது 17.7%.

அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளன.