டிசம்பர் 15 முதல் வெளிநாட்டு பயணிகள் விமானச் சேவையை மீண்டும் தொடங்குகிறது இந்தியா

டிசம்பர் 15 முதல் வெளிநாட்டு பயணிகள் விமானச் சேவையை மீண்டும் தொடங்குகிறது இந்தியா

1 mins read
0d93ef4f-da87-4365-8752-f0ee4209f7eb
சென்னை அனைத்துலக விமான நிலையம். -

இந்தியாவில் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்குப் பயணிகள் தொடங்கப்படும் என்று அந்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கிருமிப் பரவல் காரணமாக நிறுத்தபட்டிருந்த பயணிகள் விமானச் சேவைகள் தற்போது துபாய் உள்ளிட்ட சில நாடுகளுக்கும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அனுமதிக்கும் நாடுகளுக்கும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல், கிருமித்தொற்று அடிப்படையில் மூன்று வகையாக வெளிநாடுகளைப் பிரித்து சில கட்டுப்பாடுகளுடன் விமானங்களை இயக்க இந்தியா முடிவு செய்துள்ளது.