குடும்ப அரசியல், ஊழல்

மக்கள் புறக்கணிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் அர­சி­யல் கட்­சி­கள் நடத்­தும் குடும்ப அர­சி­யல் ஜன­நா­ய­கத்­திற்கு மிகப்­பெ­ரும் அச்­சு­றுத்­த­லாக உள்­ளது என்று பிர­த­மர் நரேந்­திர மோடி கூறி­யுள்­ளார்.

இந்­தி­யா­வில் ேநற்று அர­சி­யல் சாசன தினம் கொண்­டா­டப்­பட்­டது. இதை­யொட்டி, நாடா­ளு­மன்ற மைய மண்­ட­பத்­தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த சிறப்பு நிகழ்ச்­சி­யில் பங்­கேற்று பிர­த­மர் மோடி பேசி­னார்.

அப்­போது அவர் கூறு­கை­யில், “பல்­வேறு தடை­க­ளுக்கு மத்­தி­யில் நமது அர­சி­ய­ல­மைப்பு வடி­வ­மைக்­கப்­பட்­டது. பன்­மு­கத்­தன்மை கொண்ட நமது நாட்டை இந்­திய அர­சி­ய­ல­மைப்பே ஒன்­று­ப­டுத்­து­கிறது. நமது அர­சி­ய­ல­மைப்பு என்­பது பல்­வேறு சட்­ட­வி­தி­க­ளின் தொகுப்பு மட்­டு­மல்ல, பெரும் பாரம்­ப­ரி­ய­மும்­கூட. எதிர்­கா­லத் தலை­மு­றை­யி­னர் நமது அர­சி­ய­ல­மைப்பு பற்றி தெரிந்­து­கொள்ள வேண்­டும்.

“இந்த நாள்­தான் எதி­ரி­கள் இந்­தி­யா­விற்குள் நுழைந்து தாக்­கு­தல் நடத்­திய துக்க நாள். 26/11 மும்பை பயங்­க­ர­வாதத் தாக்­கு­

த­லின்போது உயிர்த்தியா­கம் செய்த பாது­காப்பு வீரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­கி­றேன்.

“நாட்­டில் பல கட்­சி­கள் குடும்ப அர­சி­யல் செய்­கின்­றன. குடும்ப அர­சி­யல் ஜன­நா­ய­கத்­திற்கு மிகப்­பெ­ரும் அச்­சு­றுத்­த­லாக உள்­ளது. குடும்ப அர­சி­யல் செய்ய நினைப்­

ப­வர்­கள் அர­சி­ய­லுக்கு வர­வேண்­டாம்.

“அர­சி­யல் கட்­சி­கள் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டங்­களைப் புரிந்து செயல்­பட வேண்டும். ஊழ­லுக்­காகத் தண்­டனை பெற்­ற­வர்­கள் அர­சி­ய­லில் ஈடு­ப­டக்­கூ­டாது.

“ஊழல் செய்­த­வர்­களை மக்­கள் புறக்­க­ணிக்க வேண்­டும்,” என்று மோடி தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நடை­பெற்ற அர­சி­யல் சாசன தினக் கொண்­டாட்ட நிகழ்ச்­சி­களை திமுக, திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் உள்­ளிட்ட 14 எதிர்க்­கட்­சி­கள் புறக்­க­ணித்­தன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!