இந்தியாவின் ஆகப்பெரிய விமான நிலையம்

இந்தியாவின் ஆகப்பெரிய விமான நிலையம்

1 mins read
0d86e9a7-4899-43fb-8537-c81d99427775
-

நொய்டா: டெல்­லி­யில் இருந்து 72 கிலோ­மீட்­டர் தொலை­வில் உத்­த­ரப் பிர­தே­சத்­தின் ஜீவர் என்­னு­மி­டத்­தில் நொய்டா பன்­னாட்டு விமான நிலை­யம் கட்­டப்­பட உள்­ளது. நாட்­டி­லேயே மிகப்­பெ­ரிய விமான நிலை­யத்­தின் முதற்­கட்­டப் பணி 10,050 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ளது. இதற்­காக, 1,300 ஹெக்­டர் நிலம் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதற்கான அடிக்­கல்லை பிர­த­மர் மோடி நேற்று முன்­தி­னம் நாட்­டி­னார். 2024ஆம் ஆண்டு முதற்­கட்ட கட்­டு­மா­னப் பணிகள் முடி­வ­டைந்­த­தும் ஆண்­டுக்கு 12 மில்­லி­யன் (ஒரு கோடியே 20 லட்­சம்) பய­ணி­க­ளைக் கையா­ளும் திறனை அது பெற்­றி­ருக்­கும்.