புதுடெல்லி: தேசிய குடும்ப சுகாதார ஆய்வு முடிவுகளின் ஐந்தாவது அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் உள்ள பெண்கள் அதிகமான அளவில் வங்கிக் கணக்குத் திறந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட 80 விழுக்காட்டுப் பெண்கள் தங்களுக்கென வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். இது 2015-16ஆம் ஆண்டில் 53 விழுக்காடாக இருந்தது.
பெண்களின் சமூக, பொருளியல் அந்தஸ்து, குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிலம் அல்லது வீட்டுக்குச் சொந்தக்காரர்களாக பெண்கள் இருப்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கைபேசி வைத்துக்கொள்ளும் பெண்கள் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் 45.9% பெண்களிடம் கைபேசி இருந்தது. தற்போது அது 54% ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும் ஹரியானா, சண்டிகர் மாநிலங்களில் பெண்கள் கைபேசி வைத்திருக்கும் விகிதம் சற்று குறைந்துவிட்டது.