செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
da2134b2-e9fc-4cd6-b015-513ae83cac82
-

சபரிமலையில் தினமும் 45,000 பக்தர்களுக்கு அனுமதி

சப­ரி­மலை: சப­ரி­ம­லை­யில் நடை திறக்­கப்­பட்டு தின­மும் சிறப்பு பூசை நடந்து வரு­கிறது. இணை­யம் மூலம் முன்­

ப­திவு செய்த 30,000 பக்­தர்­கள் தின­மும் தரி­ச­னம் செய்ய அனு­ம­திக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள். இந்த நிலை­யில் ஐயப்ப பக்­தர்­க­ளின் அடிப்­படை வசதி தொடர்­பாக கேரள தேவஸ்­தான துறை அமைச்­சர் ராதா­கி­ருஷ்­ணன், எரு­மேலி, நிலக்­கல் மற்­றும் பம்பை ஆகிய பகு­தி­க­ளுக்கு நேரில் சென்று ஆய்வுப் பணி­களை மேற்­கொண்­டார். பின்­னர் அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில், "சப­ரி­ம­லை­யில் தரி­ச­னம் செய்ய இணைய முன்­ப­திவு அடிப்­ப­டை­யில் இனி தின­மும் 40,000 பக்­தர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள். அதே­போல் உட­னடி முன்­ப­திவு மூல­மாக ஒவ்­வொரு நாளும் 5,000 பக்­தர்­கள் கூடு­த­லாக அனு­ம­திக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. பம்பை ஆற்­றில் வெள்­ளப்­பெ­ருக்கு குறைந்­தால் அதில் குளிக்க பக்­தர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள்," என்­றார்.

கல்லூரியில் 182 பேருக்கு தொற்று

பெங்களூரு: கர்நாடகாவில் தர்வாத் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சில பேராசிரியர் களுக்கும் மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி ஆனது. அண்மையில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களை வரவேற்க நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றவர்கள் அவர்கள். எனவே விழாவுக்குச் சென்ற மற்றவர்களிடமும் பரிசோதனை நடத்தப்பட்டதில் நேற்று வரை 182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

ரூ.100 கோடி ஹெராயின் கடத்தல்

ஜம்மு: ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் போலிசார் ஈடுபட்டிருந்தபோது ஒரு சரக்கு லாரியை மடக்கினர். அதில் 100 கோடி ரூபாய் மதிப்புடைய 52 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு, ஓட்டுநர் கைது செய்யப் பட்டார். பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் கடத்தி வரப்பட்ட இந்தப் போதைப்பொருள் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்யும் நோக்குடன் அனுப்பி வைக்கப்பட்டதாக போலிசார் கூறினர்.