புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, டிசம்பர் 15ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானச் சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்தந்த நாடுகளில் உள்ள கொரோனா தொற்று பாதிப்பின் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் விமானங்கள் இயக்கப்படும் என்றும் வெளிநாடுகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படும் என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மைக் காலமாக 'ஏர் பபுள்' எனப்படும் இரு நாடுகளுக்கிடையே பல்வேறு விதிமுறைகளுடன் செய்துகொள்ளப்படும் உடன்பாட்டின் அடிப்படை யில், விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்தியா 25 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் பயணிகள் விமானச் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.