மும்பை தாக்குதல் வழக்கை முடிக்க வலியுறுத்து

புது­டெல்லி: மும்பை தீவி­ர­வாத தாக்­கு­தல் தொடர்­பான வழக்கு விசா­ர­ணையை விரை­வில் முடிக்க வேண்­டும் என பாகிஸ்­தான் அரசை, இந்­தியா வலி­யு­றுத்தி உள்­ளது.

இந்த வழக்­கில் பாகிஸ்­தான் அரசு இரட்டை நிலைப்­பாட்­டைக் கொண்­டி­ருக்­கக் கூடாது என­வும் மத்­திய அரசு கூறி­யுள்­ளது.

புது­டெல்­லி­யில் உள்ள பாகிஸ்­தான் மூத்த அதி­கா­ரிக்கு அழைப்­பாணை அனுப்­பப்­பட்டு அவர் நேரில் வர­வ­ழைக்­கப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்ள இந்­திய வெளி­யு­றவு அமைச்சு, கொடூ­ர­மான முறை­யில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல் தொடர்­பான வழக்­கில் பாகிஸ்­தான் தரப்பு அக்­க­றை­யின்­றிச் செயல்­ப­டு­வ­தாக அவ­ரி­டம் தெரி­விக்­கப்­பட்­ட­தா­கக் கூறி­யுள்­ளது.

"தனது கட்­டுப்­பாட்­டில் உள்ள மண்ணை, இந்தியாவிற்கு எதி­ராக பயங்­க­ர­வாதச் செயல்­களுக்குப் பயன்படுத்த அனு­ம­திக்­கப் போவ­தில்லை என பாகிஸ்­தான் வாக்­கு­றுதி அளித்­துள்­ளது. அதை நிறை­வேற்ற வேண்­டும்.

"குற்­ற­வா­ளி­களை சட்­டத்­தின் முன் நிறுத்த வேண்­டும் என­வும் பாகிஸ்­தான் மூத்த தூத­ரக அதி­கா­ரி­யி­டம் வலி­யு­றுத்­தப்­பட்­டது," என மத்­திய வெளி­யு­றவு அமைச்சு அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு, நவம்­பர் 26ஆம் தேதி மும்­பை­யின் பல்­வேறு பகு­தி­களில் தீவி­ர­வா­தி­கள் நடத்­திய தாக்­கு­த­லில் 166 பேர் கொல்­லப்­பட்­ட­னர். அத்­தாக்­கு­த­லின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்­தி­னம் அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

தாக்­கு­தல் நடத்­திய பாகிஸ்­தான் பயங்­க­ர­வா­தி­களில் ஒன்­பது பேர் பாது­காப்புப் படை­யி­ன­ரால் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­னர். உயி­ரு­டன் பிடி­பட்ட பாகிஸ்­தான் பயங்­க­ர­வாதி அஜ்­மல் கசாப்­பிற்கு தூக்குத் தண்டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வழக்கு பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

அதற்குத் தேவையான பல்வேறு ஆதாரங்கள் இந்திய தரப்பில் இருந்து அளிக்கப்பட்டது. எனினும், வழக்கு மெத்தனப் போக்கில் கையாளப்படுவதாக இந்தியா குற்றம்சாட்டி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!