டிசம்பர்-2 வரை மழை: தென்மாநிலங்களுக்கு எச்சரிக்கை

பெங்­க­ளூரு: நடப்பு நவம்­பர் மாதத்­தில் மட்­டும் தென்மாநி­லங்­களில் 1,172 பேர் மழைக்கு பலி­யா­கி­விட்­டது தெரிய வந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், தென்மாநி­லங்­களில் டிசம்­பர் 2ஆம் தேதி வரை கன­மழை நீடிக்­கும் என இந்­திய வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

தென்மாநி­லங்­களில் தமி­ழ­கத்­தில்­தான் ஆக அதி­க­மாக 68 பேரை மழை பலி கொண்­டுள்­ளது. அதற்கு அடுத்­த­ப­டி­யாக, கேர­ளா­வில் 48 பேரும் ஆந்­தி­ரா­வில் 44 பேரும் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

கர்­நா­ட­கா­வில் மரண எண்­ணிக்கை 12ஆக உள்­ளது.

இம்­மா­நி­லங்­களில் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்ட முப்­ப­துக்­கும் மேற்­பட்­டோர் நிலைமை என்­ன­வா­னது எனத் தெரி­ய­வில்லை.

தற்­போது வங்­காள விரி­குடா கடற்­ப­கு­தி­யில் புதி­தாக மேலும் ஒரு காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகுதி உரு­வாகி உள்­ளது. கடந்த 1ஆம் தேதி­யில் இருந்து இது­வரை நான்கு தாழ்­வுப் பகு­தி­கள் உரு­வாகி உள்­ளன.

இதே கால­கட்­டத்­தில் தென்மாநி­லங்­களில் 143.4% அளவு கூடு­தல் மழை பெய்­துள்­ள­தாக வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது. குறிப்­பாக, கர்­நா­ட­கா­வி­லும் கேர­ளா­வி­லும் வழக்­கத்­தை­விட 110 விழுக்­காடு கூடு­தல் மழை பெய்­துள்­ளது. வழக்­க­மாக தமி­ழ­கத்­தில் இக்­கா­ல­கட்­டத்­தில் குறை­வான மழையே பதி­வா­கும். ஆனால், இம்­முறை அங்­கும் 70% கூடு­தல் மழை பெய்­துள்­ளது.

ஆந்­திர மாநி­லம் திருப்­ப­தி­யில் கன­மழை நீடித்து வரு­கிறது. இத­னால் அங்­குள்ள மலைப்­பாதை வெகு­வாக சேத­ம­டைந்­துள்­ளது.

இதற்­கி­டையே, பெங்­க­ளூ­ரி­லும் தெற்கு கர்­நா­ட­கா­வி­லும் மழை பெய்­யும் என கணிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆந்­தி­ரா­வில் 1,169 வீடு­கள் மழை­யால் முற்­றி­லும் சேத­ம­டைந்­துள்­ளன. 5,434 வீடு­க­ளின் ஒரு பகுதி சேத­ம­டைந்­துள்­ள­தாக அம்­மா­நில முதல்­வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரி­வித்­துள்­ளார்.

நவம்­பர் 19ஆம் தேதி வரை அங்கு நீடித்த கனமழை­யால், நான்கு மாவட்­டங்­களில் உள்ள 1,990 கிரா­மங்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார். கேர­ளா­வில் கடந்த 60 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு மழை பெய்­துள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!